/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வருகிறார் முதல்வர்
/
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வருகிறார் முதல்வர்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வருகிறார் முதல்வர்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வருகிறார் முதல்வர்
ADDED : மே 24, 2025 02:28 AM
சேலம், முதல்வர் ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் வரும், 11, 12ல் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனால் இரும்பாலை சாலையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரியில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அப்பணியை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று பார்வையிட்டார்.
முதல்வர், ஜூன், 11ல், 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். தொடர்ந்து மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள்; வரும் சட்டசபை தேர்தல் வியூகம்; சேலம் மாவட்டத்தில், 11 தொகுதிகளையும் கைப்பற்றுவது உள்ளிட்டவை குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 12 காலை, 10:00 மணிக்கு, மேட்டூர் செல்லும் முதல்வர், காவிரி டெல்டா பாசன நீரை திறந்துவிட உள்ளார்.