/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் உண்மைக்கு மாறாக பேசும் முதல்வர்'
/
'வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் உண்மைக்கு மாறாக பேசும் முதல்வர்'
'வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் உண்மைக்கு மாறாக பேசும் முதல்வர்'
'வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் உண்மைக்கு மாறாக பேசும் முதல்வர்'
ADDED : டிச 15, 2024 03:16 AM
ஓமலுார்: பா.ம.க.,வின், சமூக நீதி பேரவை தலைவர் பாலு, சேலம் மாவட்டம் ஓமலுார் சட்டசபை தொகுதியில், இரு நாட்களாக ஆய்வு குழு கூட்டம் நடத்தினார். நேற்று அவர், ஓமலுார் ஆய்வு மாளிகையில் அளித்த பேட்டி:
வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து, சட்டச-பையில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, அதன் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தடை இருக்கிறது. அதனால் நிறைவேற்ற முடியாது என, உண்மைக்கு மாறாக பேசியுள்ளார். தேவைப்பட்டால் புதிய தரவுகள் அடிப்படையில், வன்னியர்கள் அல்லது பிற சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்ற பரிந்துரையோடு வழக்கு முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் தவறான கருத்தை பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள, 2 கோடி வன்னிய மக்களை நயவஞ்சமாக ஏமாற்றுகின்றனர். இதற்கு முதல்வர் ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இது சமூக நீதிக்கான பிரச்னை. பல மாநிலங்-களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துகின்றனர். ஆனால் மத்-திய அரசு தான் நடத்த வேண்டும் என, தமிழக அரசு கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. முன்னாள் முதல்வர் கரு-ணாநிதியின் சமூக நீதி கொள்கைக்கு எதிராக, அவரது மகன் ஸ்டாலின் செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், வன்னியர் சங்க மாநில செயலர் கார்த்திக், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம் உடனி-ருந்தனர்.