/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று, நாளை 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
/
இன்று, நாளை 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
ADDED : பிப் 05, 2025 07:22 AM
சேலம்: ஆத்துார், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 'மக்களுடன் முதல்வர்' 3ம் கட்ட முகாம், இன்று நடக்கிறது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலையில் நடக்கிறது.
அதன்படி ஆத்துார் ஒன்றியம் கல்பகனுார் ஊராட்சிக்கு, ஊராட்சி அலுவலகம் அருகிலும், அரசநத்தம் ஊராட்சிக்கு அரவிந்த் திருமண மண்டபம், துலுக்கனுார் ஊராட்சிக்கு, ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் பனைமடல் ஊராட்சிக்கு, காமராஜர் காலனியில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகம்; வெள்ளாளப்பட்டி ஊராட்சிக்கு ஊராட்சி அலுவலக வளாகத்தில் முகாம் நடக்கிறது.நாளை, தலைவாசல் ஒன்றியத்தில் காட்டுக்கோட்டை ஊராட்சிக்கு, ஊராட்சி சேவை மையம் அருகே; சிறுவாச்சூர் ஊராட்சிக்கு ஊராட்சி அலுவலகம் அருகே; தலைவாசல் ஊராட்சிக்கு நத்தக்கரை ஒன்றிய தொடக்கப்பள்ளி; மணிவிழுந்தான் ஊராட்சிக்கு, வடக்கு புதுார் ஒன்றிய நடுநிலைப்பள்ளி; காமக்காபாளையம் ஊராட்சிக்கு ஊராட்சி சேவை மையம் அருகே முகாம் நடக்க உள்ளதாக, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.