/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்வர் கோப்பை போட்டி நாளை முதல் தொடக்கம்
/
முதல்வர் கோப்பை போட்டி நாளை முதல் தொடக்கம்
ADDED : ஆக 25, 2025 03:46 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, நாளை முதல், செப்., 12 வரை நடக்க உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:மாவட்ட அளவில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, ஆக., 26ல்(நாளை) தொடங்கி, செப்., 12 வரை நடக்க உள்ளது. பள்ளி, கல்லுாரி, பொது பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய பிரிவுகளில் நடக்கிறது.
மாவட்ட அளவில் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், கபடி போட்டிகள், மண்டல அளவில் கடற்கரை, கையுந்து பந்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அனைத்து போட்டிகள், சேலம் காந்தி மைதானத்தில் நடக்க உள்ளது.
கேரம், சிலம்பம், பால் பேட்மிண்டன், கோ - கோ, மண்டல அளவில் குத்துச்சண்டை ஆகிய போட்டிகள், ஆக., 26 முதல், செப்., 8 வரை, வி.எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரியில் நடக்க உள்ளது.
கால்பந்து போட்டிகள், காந்தி மைதானம், புனித பால் மேல்நி-லைப்பள்ளி மற்றும் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில், ஆக., 26 முதல், செப்., 1 வரை நடக்க உள்ளது.
கிரிக்கெட் போட்டிகள், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரியில், ஆக., 26 முதல் செப்., 3 வரையும், கைப்பந்து போட்டிகள், ஜெயராணி மெட்ரிக் மேல்நி-லைப்பள்ளியில், ஆக., 26 முதல், ஆக., 29 வரையும் நடக்க உள்-ளது.