/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழந்தை கடத்தல்: மனைவி புகாரில் கணவர் மீது வழக்கு
/
குழந்தை கடத்தல்: மனைவி புகாரில் கணவர் மீது வழக்கு
ADDED : ஜன 24, 2025 04:02 AM
ஆத்துார்: கெங்கவல்லி அருகே நடுவலுாரை சேர்ந்த குணாளன் மகன் ராஜீவ், 37. பட்டதாரி. நரசிங்கபுரத்தை சேர்ந்த, நகராட்சி முன்னாள் தலைவர் ஸ்ரீராம் மகள் சவுமியா, 26. இவருக்கும், ராஜீவுக்கும், 2020ல் திருமணம் நடந்தது. 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தம்பதி இடையே கருத்து வேறுபாடால், 2023 முதல், பிரிந்து வாழ்கின்றனர்.
சவுமியாவுடன் குழந்தை உள்ளதால், மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்று, ராஜீவ் குழந்தையை பார்த்து வந்தார். கடந்த, 11ல் அப்படி வந்த ராஜீவ், குழந்தையை அழைத்துச் சென்று, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது, 'மனைவி சவுமியா, குழந்தையின் பின்புறம் சூடு வைத்துவிட்டார்' என கூறினார்.இதையடுத்து சவுமியா, குழந்தையை கணவர் கடத்திச்சென்றதாக, ஆத்துார் டவுன் போலீசில் புகார் அளித்தார். இதனால் நேற்று, ராஜீவ் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிந்த போலீசார், அவரை தேடி வருகின்றனர்.

