/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் இடமாற்றம் அங்கன்வாடி பணியாளர்கள் சிரமம்
/
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் இடமாற்றம் அங்கன்வாடி பணியாளர்கள் சிரமம்
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் இடமாற்றம் அங்கன்வாடி பணியாளர்கள் சிரமம்
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் இடமாற்றம் அங்கன்வாடி பணியாளர்கள் சிரமம்
ADDED : நவ 10, 2024 01:06 AM
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் இடமாற்றம்
அங்கன்வாடி பணியாளர்கள் சிரமம்
பனமரத்துப்பட்டி, நவ. 10-
பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், 109 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. ஆனால் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு சொந்த கட்டடம் இல்லை.
ஏற்கனவே பனமரத்துப்பட்டியில் தனியார் வாடகை இடத்தில் செயல்பட்டது. கடந்த, 3 ஆண்டுகளாக, பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார சேவை மைய கட்டடத்தில் செயல்பட்டது. அங்கிருந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம், மல்லுாரில் உள்ள தனியார் வாடகை கட்டடத்துக்கு, ஒரு வாரத்துக்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டது.
இதனால் அங்கன்வாடி பெண் பணியாளர்கள், சமையலர்கள், மல்லுாரில் உள்ள அலுவலகம் செல்வதற்கு, இரு பஸ்கள் மாறி செல்ல வேண்டும். மல்லுார் பஸ் ஸ்டாப்பில் இருந்து, 1 கி.மீ., நடந்து செல்ல வேண்டும்.
மேலும் பனமரத்துப்பட்டியில் சுகாதாரம், தொடக்க கல்வி, ஊரக வளர்ச்சி, சத்துணவு, சமூக நலன் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ள நிலையில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் மட்டும் மல்லுாரில் உள்ளதால், பணியாளர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக சுகாதாரம், சமூக நலன் உள்ளிட்ட பிற அரசு துறைகளுடன் அங்கன்வாடி பணியாளர்கள் இணைந்து பயிற்சி, பணிகள் மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'ஊரக வளர்ச்சித்துறை கட்டடத்தில் பிற துறை அலுவலகம் இருந்தால், காலி செய்ய நடவடிக்கை எடுக்க, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி சேவை மைய கட்டடத்தில் செயல்பட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் காலி செய்யப்பட்டது' என்றார்.