/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி மீது கார் மோதி குழந்தை பலி தாய் உள்பட 4 பேருக்கு சிகிச்சை
/
லாரி மீது கார் மோதி குழந்தை பலி தாய் உள்பட 4 பேருக்கு சிகிச்சை
லாரி மீது கார் மோதி குழந்தை பலி தாய் உள்பட 4 பேருக்கு சிகிச்சை
லாரி மீது கார் மோதி குழந்தை பலி தாய் உள்பட 4 பேருக்கு சிகிச்சை
ADDED : அக் 02, 2025 01:59 AM
வாழப்பாடி, வாழப்பாடி அருகே, லாரி மீது கார் மோதிய விபத்தில், 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை ஐனாவரம் பகுதியை சேர்ந்த தனியார் வங்கி துணை மேலாளர் ஜெபாடிலமென்ட், 36. இவரது சகோதரி மார்செரின். இவருக்கு ஜூகி, 8, ஜூரியல், 3, என இரு ஆண் குழந்தைகளும், கைசி, 6, என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ஜெபாடிலமென்ட், மார்செரின் மற்றும் அவரது 3 குழந்தைகள் உள்ளிட்டோர் விடுமுறை தினத்தையொட்டி, சென்னையில் இருந்து கோவை நோக்கி, டாடா அல்ட்ரோஸ் காரில் சென்றனர்.
ஜெபாடிலமென்ட் காரை ஓட்டினார். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கருப்பட்டி காபி கடை அருகே, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மதியம் 12:00 மணிக்கு சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த ராம்கோ சிமென்ட் தொழிற்சாலைக்கு சென்ற லாரி மீது கார் மோதி, தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அப்பகுதியினர் மீட்டு, அம்மாபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ஜூரியல் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின், மார்செரின் கவலைக்கிடமான நிலையில், 4 பேரும் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வாழப்பாடி போலீசார் கூறியதாவது: சிக்கிலியன் கோம்பையை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ், சிங்கிபுரத்தில் உள்ள ராம்கோ சிமென்ட் தொழிற்சாலைக்கு செல்வதற்காக, வாழப்பாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திடீரென வாகனத்தை வளைத்துள்ளார். அப்போது, பின்னால் வந்த கார், லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து,இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.
இவ்வாறு கூறினர்.