/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொடர் பண்டிகை எதிரொலி ஓமலுார் போலீசார் சோதனை
/
தொடர் பண்டிகை எதிரொலி ஓமலுார் போலீசார் சோதனை
ADDED : அக் 02, 2025 01:59 AM
ஓமலுார், தொடர் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் ஓமலுார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஓமலுார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பொதுமக்கள் வாகனங்கள் அதிகளவில்
செல்வர்.பண்டிகை நாளில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஓமலுார் போலீசார் காலை, 6:00 மணி முதல் இன்று காலை, 6:00 மணிவரை பெரமெச்சூர் பிரிவு, பாகல்பட்டி, மேச்சேரி பிரிவுரோடு ஆகிய பகுதிகளில் சுழற்சி முறையில் ஒரு எஸ்.ஐ., தலைமையில் 4 போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஓமலுார் பஸ்நிலையம், கடைவீதி, தர்மபுரி மெயின்ரோடு பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.