/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவிக்கு குழந்தை: தொழிலாளிக்கு போக்சோ
/
மாணவிக்கு குழந்தை: தொழிலாளிக்கு போக்சோ
ADDED : பிப் 06, 2026 04:28 AM
ஆத்துார்: பிளஸ் 2 மாணவிக்கு குழந்தை பிறந்ததால், கூலித் தொழிலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த, 17 வயது மாணவி அரசு பள்-ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கு, நேற்று வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அவரது பெற்றோர், ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சில மணி நேரத்தில், பெண் குழந்தை பிறந்தது.விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், மூரல்பாளையத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் தென்னரசு, 24, என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர், மாணவியுடன் மூன்று ஆண்டுகளாக பழகி வந்துள்ளார். கடந்தாண்டு மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததில் கர்ப்பமாகியுள்ளார்.
இது பற்றி மாணவி, வீட்டில் யாருக்கும் தெரியப்படுத்தாமல் இருந்த நிலையில், நேற்று குழந்தை பிறந்த பின், இந்த விவகாரம் தெரியவந்தது. இது குறித்து, மாணவி அளித்த புகாரில், ஆத்துார் அனைத்து மகளிர் போலீசார், கள்ளக்குறிச்சியை சேர்ந்த தென்ன-ரசு மீது, போக்சோ வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

