/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
27ல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு
/
27ல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு
ADDED : நவ 30, 2024 02:42 AM
இடைப்பாடி: துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் கடந்த, 27ல் கொண்டா-டப்பட்டது. இதையொட்டி, தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்டத்தில் உள்ள சங்ககிரி, இடைப்பாடி, மேட்டூர் ஆகிய சட்-டசபை தொகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகா-தார மையங்களில், அன்ற பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்படும் என, அதன் மாவட்ட செயலரான, சேலம் எம்.பி., செல்வகணபதி அறிவித்திருந்தார். அதன்படி கடந்த, 27ல் பிறந்த, 10 குழந்தைகளுக்கு செல்வகணபதி நேற்று தங்க மோதிரம் அணிவித்தார். தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகமும் வழங்கினார். மாவட்ட துணை செயலர் சம்பத்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன், ஒன்றிய செயலர் நல்லதம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதேபோல், மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிறந்த, 7 குழந்-தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்தார். தொடர்ந்து கொளத்துார் சென்ற அவர், அங்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு மோதிரம் அணி-வித்தார். தி.மு.க., நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.ரத்த தானம்
பனமரத்துப்பட்டி தி.மு.க., - ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து, ரத்த தான முகாமை நேற்று நடத்தின. வட்டார மருத்-துவ அலுவலர் மகிதா, ஒன்றிய தி.மு.க., செயலர் உமாசங்கர் முன்னிலை வகித்தனர். தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். அவர் உள்-பட ஏராளமான தி.மு.க., நிர்வாகிகள் ரத்த தானம் வழங்கினர். மேலும் பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியா-ளர்களுக்கு, அறுசுவை விருந்து பரிமாறப்பட்டு, வேட்டி, சேலை வழங்கினர். அவைத்தலைவர் சவுந்தரராஜன், டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் பிரபுகண்ணன், தி.மு.க., நகர செயலர் ரவிக்-குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

