/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மார்கழியில் பஜனை பாடி வரும் சிறுவர்கள்
/
மார்கழியில் பஜனை பாடி வரும் சிறுவர்கள்
ADDED : டிச 18, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: வள்ளலாரின் கொள்கைகளை பரப்பும் நோக்கில், 80 ஆண்டுகளுக்கு மேலாக இடைப்பாடியில் சன்மார்க்க சங்கம் செயல்படுகிறது. அதன் நிர்வாகிகள், 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள், மார்கழி முழுதும் இடைப்பாடி நகர பகுதிகளான திரவுபதியம்மன் கோவில் தெரு, சின்னமாரியம்மன் கோவில் தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, பவானி சாலை, பஸ் ஸ்டாண்ட், மசூதி தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியே பஜனை பாடி, வழியில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்து வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு மேலாக தெருக்களில் பஜனை பாடி வருகின்றனர். இந்த சிறார்களுக்கு, அவர்கள் செல்லும் வழியில் உள்ள கோவில் நிர்வாகத்தினர், பொங்கல், உணவு கொடுத்து வருகின்றனர்.