/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிறிஸ்தவ தேவாலயங்களில் நாளை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
/
கிறிஸ்தவ தேவாலயங்களில் நாளை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
கிறிஸ்தவ தேவாலயங்களில் நாளை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
கிறிஸ்தவ தேவாலயங்களில் நாளை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
ADDED : டிச 24, 2024 02:07 AM
சேலம், டிச. 24-
கிறிஸ்தவ தேவாலயங்களில், நாளை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பான டிச.,25ல், கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் 4 ரோடு அருகே உள்ள குழந்தை ஏசு பேராலயத்தில், நாளை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பேராலயத்தில், இன்று நள்ளிரவில் சிறப்பு திருப்பலி, இயேசு சொரூபம் காண்பிக்கப்படும். தொடர்ந்து காலையில் சிறப்பு திருப்பலி நடைபெறும். குழந்தை ஏசு பேராலயம் கண்கவரும் வகையில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.அதேபோல், சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நாளை அதிகாலை, 4:00 மணிக்கு பரிசுத்த நற்கருணை ஆராதனை, 7:00 மணிக்கு ஆங்கில ஆராதனை, மாலை, 4:00 மணிக்கு கிறிஸ்துமஸ் மர விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.மேலும் அஸ்தம்பட்டி இம்மானுவேல் பேராலயம், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், அழகாபுரம் துாயமிக்கேல் ஆலயம் என மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.