/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆலை வேன் மோதி 9ம் வகுப்பு மாணவர் பலி
/
ஆலை வேன் மோதி 9ம் வகுப்பு மாணவர் பலி
ADDED : செப் 13, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமந்துறை: கருமந்துறை அடுத்த தேக்கம்பட்டை சேர்ந்த விவசாயி கணேசன். இவரது மகன் கண்ணன், 13. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்தான். நேற்று பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் காலை, 11:30 மணிக்கு தேக்கம்பட்டு அருகே புதுாரில் இருந்து தேக்கம்பட்டு நோக்கி, 'ஸ்பிளண்டர்' பைக்கில் கண்ணன், ஹெல்மெட் அணியாமல் சென்றுகொண்டிருந்தான்.
அப்போது தனியார் நுாற்பாலை வேன், பைக் பின்புறம் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கண்ணன், சம்பவ இடத்தில் உயிர் இழந்தான். கருமந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.