ADDED : ஆக 15, 2025 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், தமிழக அரசின் பள்ளிசாரா, வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில், 2025 - 2026ம் ஆண்டுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம், சேலம் மத்திய சிறையில் நேற்று தொடங்கியது. அதில், 285 கைதிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்த வகுப்பு ஜனவரியில் நிறைவடையும். தொடக்க விழாவில் சிறை எஸ்.பி., வினோத், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.