/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துாய்மை பணியாளர் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும்'
/
துாய்மை பணியாளர் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும்'
துாய்மை பணியாளர் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும்'
துாய்மை பணியாளர் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும்'
ADDED : டிச 08, 2024 12:57 AM
துாய்மை பணியாளர் உடல்நலனில்
அக்கறை செலுத்த வேண்டும்'
சேலம், டிச. 8-
சேலத்தில், துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கிவைத்து பேசியதாவது:
மாநகராட்சியில் பணியாற்றும், 2,200 துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. கண், காது, மூக்கு, தொண்டைக்கான சிகிச்சை அளிப்பதோடு, பொது மருத்துவம், அறுவை சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு, 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில், மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
முகாமில் பங்கேற்கும் துாய்மை பணியாளர்களின் மருத்துவ விபரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்படும். நோய் வரும்முன் காக்கும் உன்னத பணிகளை தினமும் மேற்கொள்ளும் துாய்மை பணியாளர்கள், உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங், மேயர் ராமச்சந்திரன், எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ., அருள் உள்பட பலர் பங்கேற்றனர்.