/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
100 நாள் வேலைக்கு லஞ்சம் வாங்கிய பஞ்.,கிளார்க் கைது
/
100 நாள் வேலைக்கு லஞ்சம் வாங்கிய பஞ்.,கிளார்க் கைது
100 நாள் வேலைக்கு லஞ்சம் வாங்கிய பஞ்.,கிளார்க் கைது
100 நாள் வேலைக்கு லஞ்சம் வாங்கிய பஞ்.,கிளார்க் கைது
ADDED : செப் 27, 2024 07:13 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, 100 நாள் வேலை வழங்க பயனாளியிடம், 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பஞ்., கிளார்க்கை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் தங்கதுரை, 45. இவர் நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட, குட்டலாடம்பட்டி பஞ்., கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார். இந்த பகுதி யில், 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டுமானால் தலா, 1,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, தங்கதுரை கேட்டுள்ளார். இது குறித்து, குட்டலாடம்பட்டியை சேர்ந்த சந்தோஷி, 41, என்பவர் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, சந்தோஷியிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் கொடுத்துள்ளனர். நேற்று மதியம், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பஞ்., கிளார்க் தங்கதுரையிடம், சந்தோஷி கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சுபாஷினி, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், தங்கதுரையை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதே பெண் தான், ஏற்கனவே குட்டலாடம்பட்டி பஞ்., வி.ஏ.ஓ., லஞ்சம் வாங்கியதை, லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்து, தைரியமாக வெளி உலகத்திற்கு கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.