/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : பிப் 04, 2025 06:38 AM
மகுடஞ்சாவடி: சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே தனியார் பள்ளியில், காலநிலை மாற்றம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
பசுமை தாயகம் தலைவர் சவுமியா பேசியதாவது: சுற்றுச்சூழல் மாசடைவதால் தண்ணீர் கெட்டு வருகிறது. சேலத்தில் மணிமுத்-தாறு, சரபங்கா, வசிஷ்ட நதி என மூன்று நதிகள் ஓடுகிறது. அனைத்தும் மாசுபட்டுள்ளது
வேதனை அளிக்கிறது. எனவே, நல்ல நீரை பாதுகாக்க வேண்டும். மேட்டூர் அணையில், 93 டி.எம்.சி.தண்ணீரை சேமித்து வைக்க முடியும். மீதி வெளியேறும் நீரை கடலுக்கு அனுப்பி விடுகிறோம் அதை சேமிக்க
வேண்டும். அவ்-வாறு சேமித்தால் சேலம், தர்மபுரி மாவட்டம் செழிப்பாக இருக்கும். நல்ல காற்று, தண்ணீரை
மாசுபடாமல் பாதுகாக்கா-ததால் உலக வெப்பமயமாதல் ஏற்பட்டு விட்டது. அதை தடுக்க வேண்டுமானால்
தண்ணீர், காற்றை மாசுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சேலம் மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர் நட-ராஜன்,
பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் என இரு புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களை போல,
நீங்களும் உங்கள் உடலை பாதுகாக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். போதை உள்ளிட்ட தீய
பழக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டாம். இன்று பெண்கள் பாதுகாப்புக்கு அச்சு-றுத்தல் உள்ளது. எனவே
பெண்கள் சிலம்பம், கராத்தே கற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு பேசினார். சேலம் மேற்கு பா.ம.க.,-
எம்.எல்.ஏ.,அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

