/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூடப்பட்ட துணை அஞ்சலகம்: வருவாய் நஷ்டத்தால் நடவடிக்கை
/
மூடப்பட்ட துணை அஞ்சலகம்: வருவாய் நஷ்டத்தால் நடவடிக்கை
மூடப்பட்ட துணை அஞ்சலகம்: வருவாய் நஷ்டத்தால் நடவடிக்கை
மூடப்பட்ட துணை அஞ்சலகம்: வருவாய் நஷ்டத்தால் நடவடிக்கை
ADDED : பிப் 20, 2024 11:24 AM
சேலம்: சேலத்தில், வருவாய் நஷ்டத்தால் மூடப்பட்ட துணை அஞ்சலகம், தலைமை அஞ்சலகத்துடன் இணைக்கப்பட்டு, தொடர்ந்து சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே, காசக்காரனுாரில் செயல்பட்டு வந்த துணை அஞ்சலகம்நேற்று திடீரென மூடப்பட்டது. தகவல் பலகையில், 'காசக்காரனுார் துணை அஞ்சலகம் நிர்வாக காரணங்களுக்காக, 19 முதல், சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, வாடிக்கையாளர்கள் தங்களுடைய தபால், அஞ்சலக வங்கி சேவைக்கு அருகில் உள்ள சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தை பயன்படுத்தி கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது' என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை கண்டித்து அப்பகுதி மக்கள், நேற்று காலை, 9:00 மணியளவில் துணை அஞ்சலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, இதுவே நிரந்தரமாக செயல்பட வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பார்த்திபன் கூறியதாவது:
காசக்காரனுார் துணை அஞ்சலகத்தின் ஆண்டு வருவாய், 1.59 லட்ச ரூபாய். செலவீனம், 9.77 லட்ச ரூபாய். அதன்மூலம் ஆண்டுக்கு, 8.18 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. துணை அஞ்சலகத்தின் வருவாய் சதவீதம், 100 ரூபாய்க்கு, 16 ரூபாய் 28 காசு மட்டுமே கிடைத்தது. குறிப்பாக, துணை அஞ்சலக பகுதிக்கு அருகில் உள்ள ஜாகீர்அம்மாபாளையம் துணை அஞ்சலகத்தில் இருந்து தான், தபால் பட்டுவாடா நடந்தது. தவிர, காசக்காரனுார் அஞ்சலகத்தில் இருந்து, 1 கி.மீ., தொலைவில் உள்ள ஜாகீர்அம்மாபாளையம் தபால் அலுவலகம், 4 தபால்காரருடன் செயல்படுகிறது. அதேபோல, 1.5 கி.மீ., தொலைவில் உள்ள சூரமங்கலம் தபால் அலுவலகம், 9 தபால்காரர்களுடனும், 1.5 கி.மீ., தொலைவில் உள்ள அழகாபுரம் தபால் அலுவலகம், 10 தபால்காரர்களுடன் இயங்கி வருகிறது. எனவே வருவாய் நஷ்டம், குறுகிய தொலைவு காரணமாக காசக்காரனுார் துணை அஞ்சலகம், அருகில் உள்ள சூரமங்கலம் அஞ்சலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் எல்லா சேவைகளும் தடையின்றி பெறலாம்.
இவ்வாறு கூறினார்.

