/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்வர் மருந்தகம்; விண்ணப்பிக்க அழைப்பு
/
முதல்வர் மருந்தகம்; விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : நவ 11, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: மருந்துகள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க, முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளன. அதற்கு, பி.பார்ம் சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன், www.mudhalvarmarundham.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு சொந்த இடம் அல்லது வாடகை இடம், அதற்கான ரசீதுகள் உள்ளிட்டவை இருக்க வேண்டும். விருப்பம் உள்ள தொழில் முனைவோர், வரும், 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசு மானியமாக, இரு தவணைகளாக, 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மருந்தகம் அமைக்க கூடுதல் நிதிக்கு கடன் பெறவும் வழி செய்யப்படும். விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழி செய்யப்பட்டுள்ளது.