/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏலத்தில் புதிய உச்சத்தை தொட்ட தேங்காய் பருப்பு
/
ஏலத்தில் புதிய உச்சத்தை தொட்ட தேங்காய் பருப்பு
ADDED : ஜன 01, 2025 01:32 AM
வீரபாண்டி, ஜன. 1-
சேலம், உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு கிலோ தேங்காய் பருப்பு, 150 ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.
கடந்த வாரம் அதிகபட்சமாக ஒரு கிலோ தேங்காய் பருப்பு, 143.10 ரூபாய்க்கு விலை கிடைத்தது. நேற்று புதிய உச்சமாக, 152.35 ரூபாய்க்கு வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்தனர். கடந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் பருப்பு, 100 ரூபாய்க்கு ஏலம் போனது. நேற்று, 98.99 ரூபாய்க்கு விற்பனையானது. சராசரியாக, 98 முதல், 152 ரூபாய் வரை வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். மொத்தம் 1,530 கிலோ தேங்காய் பருப்பு, ஒரு லட்சத்து, 93 ஆயிரத்து, 452 ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

