/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவை - பகத் கி கோதி சிறப்பு ரயில் நீட்டிப்பு
/
கோவை - பகத் கி கோதி சிறப்பு ரயில் நீட்டிப்பு
ADDED : ஜூலை 31, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் சென்று வரும், கோவை - பகத் கி கோதி வார சிறப்பு ரயில் வியாழன்தோறும் அதிகாலை, 2:30க்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே சனி காலை, 11:30க்கு பகத் கி கோதியை அடைகிறது.இந்த ரயில், செப்., 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்க ரயில் ஞாயிறு இரவு, 7:30க்கு கிளம்பி புதன் காலை, 9:30க்கு கோவையை அடைகிறது. இந்த ரயில், செப்., 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணியரிடம் வரவேற்பால் ரயில் நீட்டிக்கப்பட்டதாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.