ADDED : ஜூலை 10, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், அசாம் மாநிலம் டிகாகோ ரயில்வே ஸ்டேஷன் அருகே, ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, சில்ஷாரில் புறப்பட்டு, நாளை காலை, 11:55க்கு கோவை வந்து சேர வேண்டிய சில்ஷார் - கோவை வார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வரும், 13 இரவு, 10:00 மணிக்கு கிளம்பும், கோவை - சில்ஷார் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
கூடுதல் 'ஏசி' பெட்டி
சேலம் வழியே வாரத்தில், 4 நாட்களுக்கு இயக்கப்படும் கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ், திருப்பதி - கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஜூலை, 31 வரை, ஏசி சேர் கார் பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்
படுகிறது. .இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.