/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வட மாநிலங்களில் குளிர் துவங்கியது ஈரோட்டில் பெட்ஷீட் விற்பனை அதிகரிப்பு
/
வட மாநிலங்களில் குளிர் துவங்கியது ஈரோட்டில் பெட்ஷீட் விற்பனை அதிகரிப்பு
வட மாநிலங்களில் குளிர் துவங்கியது ஈரோட்டில் பெட்ஷீட் விற்பனை அதிகரிப்பு
வட மாநிலங்களில் குளிர் துவங்கியது ஈரோட்டில் பெட்ஷீட் விற்பனை அதிகரிப்பு
ADDED : அக் 30, 2025 02:44 AM
ஈரோடு, வட மாநிலங்களில் மழையுடன், குளிரும் அதிகரிப்பதால், ஈரோடு மாவட்டத்தில் இருந்து பெட்ஷீட் விற்பனை அதிகரித்துள்ளது.
ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பல்வேறு வகை பெட்ஷீட், பெட்ஸ்பிரட் மற்றும் அதை சார்ந்த துணிகளின் உற்பத்தி அதிகம். இங்கிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. புரட்டாசி முதல் பெரும்பாலான மாநிலங்களில் மழையுடன், குளிரும் துவங்கி உள்ளது.
ஜவுளி கடைகள், மொத்த வியாபாரிகள், பொதுமக்கள் தரப்பில் தற்போதே பெட்ஷீட்களை வாங்கி வைக்க துவங்கி உள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் அதிகமாக உற்பத்தி செய்து, தற்போது ஆர்டரின் பேரில் அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது.
இது குறித்து, ஈரோடு டி.வி.எஸ்., வீதி மொத்த பெட்ஷீட் விற்பனையாளர்கள் கூறியதாவது:
ஈரோடு, சென்னிமலை, குமாரபாளையம் உட்பட பல பகுதிகளில் இருந்து கனமான பெட்ஷீட்களும், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டத்தில் சில
பகுதிகளில் இருந்த நைசான பெட்ஷீட், பெட்ஸ்பிரட், வகைவகையான போர்வைகள், தரை விரிப்புகள் உற்பத்தியாகி வருகின்றன.
கடந்த, 15 நாட்களுக்கு மேலாக வடமாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் வருவதால் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இங்கு, 80 முதல், 480 ரூபாய் வரையிலான சிறிய, பெரிய, அகலமான, நீளமான பெட்ஷீட்கள், சிங்கள் காட், டபுள் காட் விரிப்புகள், தற்போது நவீனமாக வரும் அகல, நீளமான கட்டில்களின் அளவை தெரிவித்தால்,
அதற்கேற்ப பெட்ஷீட்களை வாங்கி செல்கின்றனர்.
வடமாநிலங்களில் அதிக குளிர் இருக்கும் என்பதால், தரை விரிப்பு, போர்த்துவதற்கு என தனித்தனி ரகமாக வாங்குவர். மெத்தை, சோபாக்களில் விரிப்பது போன்றவையும் கேட்கின்றனர். பெட்ஷீட் அளவுக்கு ஏற்பவும், பெட்ஸ்பிரட், பிற விரிப்புகள், தலையணை உறையுடன் கூடிய பேக் என, 280 முதல், 1,500 ரூபாய் மதிப்பில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. ஜனவரி வரை பெட்ஷீட் விற்பனை தொடரும்.
இவ்வாறு கூறினர்.

