/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தரமான முறையில் உணவு வழங்க கலெக்டர் அறிவுரை
/
தரமான முறையில் உணவு வழங்க கலெக்டர் அறிவுரை
ADDED : பிப் 23, 2024 01:57 AM
ஆத்துார்:ஆத்துார், கீரிப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், திடக்கழிவு மேலாண் திட்டத்தில், மட்கும், மட்காத குப்பை வாங்குதல், அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கீரிப்பட்டி, பைத்துார் அரசு தொடக்கப்பள்ளிகளில், முதல்வரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு பார்த்தார்.அப்பேது, மாணவ, மாணவியருக்கு தரமான முறையில் உணவு வழங்கவும், சமையல் அறையை பாதுகாப்பாக வைத்திருக்கவும், கலெக்டர் அறிவுறுத்தினார். டி.ஆர்.ஓ., மேனகா, ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, தாசில்தார் பாலாஜி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
தொடர்ந்து ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் நகர செயலர் மோகன் உள்ளிட்ட கவுன்சிலர்கள், மனு அளித்தனர். அதில், 'மருத்துவ காப்பீடு அடையாள அட்டை இல்லாதவர்கள், மருத்துவ சிகிச்சை பெறும்போது கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆத்துார் ஆர்.டி.ஓ., அல்லது தாலுகா அலுவலகத்தில், மருத்துவ காப்பீடு அடையாள அட்டை பெறுவதற்கு அலுவலகம் அமைக்க வேண்டும்' என கூறியிருந்தனர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உறுதி அளித்தார்.
மின்விளக்குகள் சீரமைப்பு
ஆத்துாரில், 'உங்களைத்தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமில், கலெக்டர் பிருந்தாதேவி, இரு நாட்களாக ஆய்வு செய்தார். நேற்று முன்தினம் மாலை, நகராட்சி அலுவலகம் எதிரே, ராணிப்பேட்டை சாலையில் உள்ள மின் கம்பங்களில் விளக்குகள் எரியாமல் இருந்ததால் சீரமைக்க, நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபா கமாலுக்கு உத்தரவிட்டார். நேற்று பழுதான நிலையில் இருந்த, 9 மின் விளக்குகளை அகற்றி, புதிதாக விளக்குகள் பொருத்தும் பணியில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர்.