/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இடைநிற்றல் இல்லா நிலை உருவாக்க ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை
/
இடைநிற்றல் இல்லா நிலை உருவாக்க ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை
இடைநிற்றல் இல்லா நிலை உருவாக்க ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை
இடைநிற்றல் இல்லா நிலை உருவாக்க ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை
ADDED : அக் 11, 2025 01:07 AM
சேலம், சேலம் மாவட்ட கல்வி மீளாய்வு கூட்டம், தனியார் பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமை வகித்தார். அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:
பள்ளிகளில் தேவையான வசதி களை உருவாக்குதல், அடிப்படை வசதிகளை வழங்குதல், கல்வி தொடர்பான போக்குவரத்து, சத்துணவு திட்டங்கள், சுகாதார சேவைகள், பள்ளிகளில் கற்பித்தல் முறை, மாணவர்கள் செயல் திறன் ஆகியவை ஆய்வு செய்யப்படுகின்றன. நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வர, ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் இடைநிற்றல் இல்லாத நிலையை, ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். மாணவர் சேர்க்கை, மாணவர்களின் வருகை குறித்து, தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.