/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மருத்துவ கல்லுாரி மாணவருக்கு மாநில விளையாட்டு போட்டி
/
மருத்துவ கல்லுாரி மாணவருக்கு மாநில விளையாட்டு போட்டி
மருத்துவ கல்லுாரி மாணவருக்கு மாநில விளையாட்டு போட்டி
மருத்துவ கல்லுாரி மாணவருக்கு மாநில விளையாட்டு போட்டி
ADDED : அக் 11, 2025 01:08 AM
சேலம், அ மாநில அளவில், மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி, சேலம், இரும்பாலை அருகே உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. கல்லுாரி முதல்வர் தேவி மீனாள் தொடங்கி வைத்தார். அரசு, தனியார் மருத்துவ கல்லுாரிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவ, மாணவியருக்கு தனித்தனியே கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்து பந்து, எறிபந்து, செஸ், கேரம் உள்ளிட்ட போட்கள், 3 நாட்கள் நடக்கின்றன. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு நாளை பரிசு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை சேலம் அரசு மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர்.