/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவர்கள் சொதப்பல் கலெக்டர் வருத்தம்
/
மாணவர்கள் சொதப்பல் கலெக்டர் வருத்தம்
ADDED : நவ 23, 2024 01:30 AM
வாழப்பாடி, நவ. 23-
'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், வாழப்பாடி வட்டத்தில் இரு நாட்கள் ஆய்வை, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று முன்தினம் தொடங்கினார்.
அறுநுாற்றுமலையில் உள்ள பழங்குடியின அரசினர் உறைவிட மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது, மாணவர்களிடம் திருக்குறள் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார். அப்போது மாணவர்கள் சொதப்ப, 'மனதை நோகடிக்காதீங்க' என, கலெக்டர் வருத்தப்பட்டார். தொடர்ந்து மாணவர்களுக்கு அறிவு வளரும்படி பாடம் கற்பிக்கவும், விருப்பத்துடன் பணியாற்றவும், ஆசிரியர்களுக்கு
அறிவுறுத்தினார்.
நேற்று வாழப்பாடி, வி.புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
வாழப்பாடி டவுன் பஞ்சாயத்தில் இரு வாரங்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுவதால், மேலும் ஒரு குடிநீர் தொட்டியை, சந்தைப்பேட்டை அருகே அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து வாழப்பாடி உழவர் சந்தை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின், ஆய்வின்போது பெறப்பட்ட மக்கள் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

