/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபட் மீது லாரி மோதி கல்லுாரி மாணவர் பலி
/
மொபட் மீது லாரி மோதி கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஏப் 28, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், சூரமங்கலம், பெரிய மோட்டூர் அருகே அமராவதி நகரை சேர்ந்த சிவக்குமார் மகன் கவின்குமார், 18. ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை, 11:30 மணிக்கு, டி.வி.எஸ்., ஹெவி டியூட்டி மொபட்டில், ஹெல்மெட் அணியாமல், தங்கை லலிதாம்பாளுடன், குரங்குச்சாவடி சேகோசர்வ் பிரிவு சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வெள்ளக்கல்பட்டியில் இருந்து, எஸ்.கொல்லப்பட்டிக்கு கிரஷர் மணல் ஏற்றி வந்த லாரி மோதியதில், கவின்குமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். லலிதாம்பாள் காயத்துடன் தப்பினார். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

