/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலை தடுப்பில் மோதி பைக்கில் சென்ற கல்லுாரி மாணவர் பலி
/
சாலை தடுப்பில் மோதி பைக்கில் சென்ற கல்லுாரி மாணவர் பலி
சாலை தடுப்பில் மோதி பைக்கில் சென்ற கல்லுாரி மாணவர் பலி
சாலை தடுப்பில் மோதி பைக்கில் சென்ற கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஜன 13, 2025 03:39 AM
ஓமலுார்: ஓமலுார் அருகே கருப்பூர், உப்புகிணறு பகுதியை சேர்ந்த, கூலித்-தொழிலாளி அழகேசன், 45. இவரது மனைவி சாந்தி, 40. இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஹரீஸ்வர், 20, உப்பாரப்பட்-டியில் உள்ள தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம், தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி-விட்டு, உறவினரின், 'யமஹா ஆர் 15' பைக்கை வாங்கிக்-கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றார்.
இரவு, 11:30 மணிக்கு, தொப்பூர் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலம் அருகே சென்றபோது, சாலையின் இரும்பு தடுப்பில் மோதி பலத்த காயம் அடைந்தார். மக்கள் மீட்டு, ஓமலுார் அரசு மருத்துவம-னைக்கு அனுப்பிய நிலையில், அவர் இறந்தது தெரியவந்தது. தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.