/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரு பைக் நேருக்கு நேர் மோதி கல்லுாரி மாணவர் பலி
/
இரு பைக் நேருக்கு நேர் மோதி கல்லுாரி மாணவர் பலி
ADDED : செப் 09, 2025 01:44 AM
நங்கவள்ளி, நங்கவள்ளி, சானார்பட்டி கிராமம் பாப்பாத்திக்காட்டை சேர்ந்தவர் குணசேகரன், 25. இவர் தனது பேஷன் பிளஸ் பைக்கில், தனியார் கல்லுாரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு படிக்கும் தனது மாமா மகன் தினேஷ், 19, என்பவருடன் நேற்று மதியம், 12:00 மணிக்கு ஜலகண்டாபுரத்திலிருந்து தன் வீட்டுக்கு புறப்பட்டனர்.
சப்பாணிப்பட்டி செல்வி விநாயகர் கோவில் அருகே வந்த போது, எதிரே ஜலகண்டாபுரம் நோக்கி அதிவேகமாக வந்த ஸ்பிளண்டர் பிளஸ் பைக்குடன் நேருக்கு நேர் மோதியது. இதில், குணசேகரன், தினேஷ் ஆகியோர் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த ேஹாண்டா சைன் பைக், கீழே கிடந்த தினேஷ் மீது மோதியது. தலையில் பலத்த காயத்துடன் தினேஷ் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நங்கவள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.