/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தற்செயல் விடுப்பு எடுத்து வணிகவரி ஊழியர் போராட்டம்
/
தற்செயல் விடுப்பு எடுத்து வணிகவரி ஊழியர் போராட்டம்
தற்செயல் விடுப்பு எடுத்து வணிகவரி ஊழியர் போராட்டம்
தற்செயல் விடுப்பு எடுத்து வணிகவரி ஊழியர் போராட்டம்
ADDED : மார் 07, 2025 07:45 AM
சேலம் : தமிழக வணிக வரித்துறையில் மறு சீரமைப்புக்கு அடிப்படை அலகாக இருக்கக்கூடிய வரிவிதிப்பு வட்டங்களில் உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், பதிவுரு எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்கள் குறைக்கப்பட்டன. இதனால் பணிச்சுமை அதிகரித்ததால் மனச்சோர்வு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக கூறி, அஸ்தம்பட்டி அலுவலக வளாகத்தில் நேற்று, தற்செயல் விடுப்பு எடுத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அன்றாட பணிகளை பாதிக்கிற சூழல் உருவாகி உள்ளது. கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும். வெளியே செல்லும் அலுவலர்களுக்கு வாகன வசதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும்படி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.