/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அண்ணா பூங்கா காலி இடத்தில் பூச்செடி நட கமிஷனர் அறிவுரை
/
அண்ணா பூங்கா காலி இடத்தில் பூச்செடி நட கமிஷனர் அறிவுரை
அண்ணா பூங்கா காலி இடத்தில் பூச்செடி நட கமிஷனர் அறிவுரை
அண்ணா பூங்கா காலி இடத்தில் பூச்செடி நட கமிஷனர் அறிவுரை
ADDED : அக் 16, 2024 07:01 AM
ஏற்காடு: ஏற்காட்டில் கடந்த வாரம் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். தொடர்ந்து நேற்று அத்துறை கமிஷனர் சமயமூர்த்தி ஆய்வு செய்தார். அண்ணா பூங்காவில் கட்டப்படும் கழிப்பிடத்தை பார்வையிட்ட அவர், நவீன முறையில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும்படி கட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காலி இடத்தில் மரக்கன்றுகள், பூச்செடிகள் நட அறிவுறுத்தினார்.
படகு இல்லத்தில் சுற்றுலா பயணியர் சவாரி செய்யும்போது பாதுகாப்பு கவச உடை கண்டிப்பாக அணியவும், அதை கண்காணிக்க அதிகாரிகள் முழு கவனம் செலுத்தவும், சுற்றுலா பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் அறிவுறுத்தினார். மேலும் ஏற்காட்டின் முக்கிய இடங்களில் இங்குள்ள சுற்றுலா இடங்கள் குறித்த அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட்டார். பின் தமிழ்நாடு ஓட்டலுக்கு சென்று தங்கும் விடுதிகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தார். கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்யா நீலம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.