/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துாரில் 17வது வார்டுக்கு இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கமிஷனர்

ADDED : மே 06, 2025 02:20 AM
ஆத்துார்:
ஆத்துார் நகராட்சியில், 17வது வார்டுக்கான இடைத்தேர்தலுக்கு, வாக்காளர் பட்டியலை நகராட்சி கமிஷனர் வெளியிட்டார்.
ஆத்துார் நகராட்சி, 17வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் ேஷக்தாவூத் கடந்த, 2023, பிப்., மாதம், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த வார்டுக்கு, இடைத்தேர்தல் நடத்தும்படி, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று, ஆத்துார் நகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் சையதுமுஸ்தபாகமால், அனைத்து கட்சியினர் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
கமிஷனர் கூறுகையில், '17 வது வார்டில், 759 ஆண்கள், 829 பெண்கள், இதரர் ஒருவர் என, மொத்தம், 1,589 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டுக்கு, இரண்டு
ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் தேர்தல் நடைபெறும் ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பின், அமைதியான முறையில் இடைத்தேர்தல் நடத்தப்படும்,' என்றார்.
அப்போது, நகராட்சி தலைவி நிர்மலாபபிதா, முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம், தி.மு.க., கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
**********************