/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கத்துக்கு குழு நியமனம்
/
பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கத்துக்கு குழு நியமனம்
பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கத்துக்கு குழு நியமனம்
பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கத்துக்கு குழு நியமனம்
ADDED : டிச 03, 2024 07:00 AM
ஓமலுார்: பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கத்தை நிர்வாகிக்க, ஐந்து பேர் கொண்ட
ஒருங்கிணைப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.சேலம், பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளின், இரண்-டாண்டு
பதவிக்காலம் கடந்த, 2024 பிப்., மாதத்துடன் முடிவ-டைந்துவிட்டது. இந்நிலையில்,
அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்க, கடந்த அக்., 29ல், சங்க பொதுக்குழுக்
கூட்டம் நடை-பெற்றது.அதில் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல்,
ஆசிரியர்களின் கோரிக்கைகளை செயல்படுத்த, ஐந்து பேர் கொண்ட
'ஒருங்கிணைப்புக் குழு' அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அக்குழுவில்
முனைவர்கள் ஜெயபிரகாஷ், சிந்து, ஜெயசீலன், நித்தியானந்தன், கல்யாண்சுந்தர் ஆகியோர்
பொதுக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.பல்கலைக்கழக வளர்ச்சிக்கும், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் நலன்
சார்ந்த மேம்பாட்டிற்கும் அனைவரும் ஒத்து-ழைக்க வேண்டும் என, ஒருங்கிணைப்புகுழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.