ADDED : பிப் 24, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,: சேலம் மாவட்ட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணி சார்பில், கர்ப்பிணியருக்கு சமுதாய வளை-காப்பு விழா, மணக்காட்டில் உள்ள அரசு பள்ளியில் நேற்று நடந்-தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் எம்.பி., செல்வகணபதி முன்னிலை வகித்தனர்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கர்ப்பிணியருக்கு புடவை, வளையல் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள், ஊட்டச்-சத்து உணவுகளை வழங்கி வாழ்த்தினார். ஆர்.டி.ஓ., அபிநயா, துணை மேயர் சாரதாதேவி, மண்டல குழு தலைவி உமாராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

