/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நல விடுதி மாணவர்களுக்கு போட்டித்தேர்வு புத்தகங்கள்
/
நல விடுதி மாணவர்களுக்கு போட்டித்தேர்வு புத்தகங்கள்
நல விடுதி மாணவர்களுக்கு போட்டித்தேர்வு புத்தகங்கள்
நல விடுதி மாணவர்களுக்கு போட்டித்தேர்வு புத்தகங்கள்
ADDED : நவ 23, 2024 01:28 AM
நல விடுதி மாணவர்களுக்கு
போட்டித்தேர்வு புத்தகங்கள்
- நமது நிருபர் -
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி - 563, மிக பிற்படுத்தப்பட்டோர் விடுதி - 342, சீர்மரபினர் நல விடுதி - 133, சிறுபான்மையினர் நல விடுதி - 4 என, 1,042 பள்ளி விடுதிகள்
உள்ளன.
இவற்றில் பிளஸ் 2 வரையான மாணவ, மாணவியர் தங்கி படிக்கின்றனர். இதில் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவு தேர்வுக்கு தயாராகும்படி வினா -விடை நுால்களை, இந்த ஆண்டு முதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு புத்தக தயாரிப்பு, போக்குவரத்து செலவு என, 21.84 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதி மாணவர்களுக்கு, பிரத்யேக போட்டித்தேர்வு புத்தகங்கள் அச்சடித்து வினியோகம் செய்யப்பட
உள்ளன.