தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆப்பரேட்டர், பி.டி.ஓ., மீது புகார்

குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆப்பரேட்டர், பி.டி.ஓ., மீது புகார்

குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆப்பரேட்டர், பி.டி.ஓ., மீது புகார்


ADDED : செப் 04, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சேலம் அடுத்த திருமலைகிரி ஊராட்சி மல்ல-ராவுத்தம்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி வெங்கடாசலம், 39. இவர் நேற்று, கலெக்டர் ஆபீசில் மனு அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

என் வீட்டு குடிநீர் இணைப்பு, சாக்கடை கால்வாய் பகுதியில் உள்ளது. கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளதால், குடிநீர் இணைப்பை சற்று தள்ளி பொருத்தும்படி ஊராட்சியில் முறை-யிட்டேன். அதற்கு, 10,000 ரூபாய் செலவாகும் என, குடிநீர் ஆப்பரேட்டர் கூறினார். இதற்கு, பி.டி.ஓ.,வும் உடந்தை.நான் பணம் தர மறுத்து, கலெக்டர் முதல் முதல்வர் தனிப்பிரிவு வரை புகார் அனுப்பினேன். பின் என் வீட்டுக்கு சரிவர குடிநீர் வரவில்லை. அதற்கான காரணம் அறிந்து, குடிநீர் வால்வை முழுமையாக திறந்துவிட்ட ஆத்திரத்தில், அதன் ஆப்பரேட்டர், குடிநீர் வால்வை திறக்கும் இரும்பு ராடால் என்னை தாக்கினார். அதில் என் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, தனியார் மருத்-துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

இதுதொடர்பாக இரும்பாலை போலீசார் வழக்-குப்பதிந்த நிலையில், அதை வாபஸ் பெறும்படி நெருக்கடி கொடுத்தனர். அதை ஏற்க மறுத்ததால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் குடிநீரின்றி அவதிப்படுகிறோம். இது-தொடர்பாகவும் தொடர்ந்து புகாரளித்து வரு-கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ஊராட்சி செயலர் செல்வத்திடம் கேட்டபோது, ''அவர் தன்னிச்சையாக குடிநீர் இணைப்பை போட்டுக்கொண்டதால் துண்டித்து விட்டோம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us