/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவனை தாக்கியதாக தலைமையாசிரியர் மீது புகார்; நடவடிக்கைக்கு தாய் வேண்டுகோள்
/
மாணவனை தாக்கியதாக தலைமையாசிரியர் மீது புகார்; நடவடிக்கைக்கு தாய் வேண்டுகோள்
மாணவனை தாக்கியதாக தலைமையாசிரியர் மீது புகார்; நடவடிக்கைக்கு தாய் வேண்டுகோள்
மாணவனை தாக்கியதாக தலைமையாசிரியர் மீது புகார்; நடவடிக்கைக்கு தாய் வேண்டுகோள்
ADDED : அக் 18, 2024 07:22 AM
சேலம்: சேலத்தில், மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவரது தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே சிந்தாமணியூர், பாரப்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன், 37. மனைவி பிரேமா, 33. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முதல் மகன் கலையரசு,16; சிந்தாமணியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல், பள்ளிக்கு கலையரசு சென்றுள்ளார். அப்போது தலைமை ஆசிரியர் காமராஜ், 'கலையரசுவை அலுவலகத்திற்கு அழைத்து, ஒரு வாரம் ஏன் விடுமுறை எடுத்தாய் எனக்கேட்டு தலையை பிடித்து சுவற்றில் அடித்து, தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது. தலையில் அடிபட்ட மாணவன், சேலம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, மாணவனின் தாய் பிரேமா கூறியதாவது: ''எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பிரிந்து சென்று விட்ட நிலையில், நான் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த வாரம் முதல், மகன் கலையரசனுக்கு உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது மகனை பள்ளிக்கு அனுப்பிய போது, காய்ச்சலுடன் பள்ளி வர வேண்டாம் என ஆசிரியர் தெரிவித்தார். இந்நிலையில் உடல் நிலை சரியானவுடன், நேற்று மகன் பள்ளிக்கு சென்றார். அங்கு தலைமை ஆசிரியர் தகாத வார்தையில் பேசி, தலையை பிடித்து சுவற்றில் தாக்கியுள்ளார். இதனால் மகன் மயக்கமடைந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியர் மீது, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் கூறுகையில்,''தலைமை ஆசிரியர் தகாத வார்த்தையில் பேசி, தாக்கியதாக சம்மந்தப்பட்ட பெற்றோர், நேற்று மாலை புகார் அளித்துள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து இன்று விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.