/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருநீறு பூச அனுமதி மறுப்பு சேலம் பள்ளி மீது புகார்
/
திருநீறு பூச அனுமதி மறுப்பு சேலம் பள்ளி மீது புகார்
திருநீறு பூச அனுமதி மறுப்பு சேலம் பள்ளி மீது புகார்
திருநீறு பூச அனுமதி மறுப்பு சேலம் பள்ளி மீது புகார்
ADDED : அக் 31, 2025 01:06 AM
சேலம்:  பா.ஜ., சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண் பிரிவு மாநில தலைவர் கோபிநாத், நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:
சேலம், நெத்திமேட்டில் உள்ள, அரசு உதவி பெறும் ஜெயராணி மேல்நிலைப்பள்ளியில், இயேசு, மேரிமாதா குறித்த, 5 ஜெப பாடல்களை மாணவியர் பாட வேண்டும் என, ஆங்கில ஆசிரியை கூறியுள்ளார்.
ஒரு மாணவி பாடாமல் நின்றதற்கு, காரணம் கேட்ட போது, விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, 5 பாட வேளைகள் நிற்க வைத்துள்ளார். மேலும் திருநீறு, குங்குமம் வைத்து வந்தால், பிளேடால் சுரண்டி எடுப்பேன் என மிரட்டியுள்ளார். இதனால் பெற்றோர் அச்சமடைந்தனர்.
எனவே பள்ளி நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், ஹிந்து மாணவர்களின் உரிமையை மீட்க, பா.ஜ., போராட்டத்தை முன்னெடுக்க தயங்காது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

