/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கரையை ஆக்கிரமித்து கோவிலுக்கு அடித்-தளம் அமைத்த மூவர் மீது புகார்
/
கரையை ஆக்கிரமித்து கோவிலுக்கு அடித்-தளம் அமைத்த மூவர் மீது புகார்
கரையை ஆக்கிரமித்து கோவிலுக்கு அடித்-தளம் அமைத்த மூவர் மீது புகார்
கரையை ஆக்கிரமித்து கோவிலுக்கு அடித்-தளம் அமைத்த மூவர் மீது புகார்
ADDED : செப் 04, 2024 09:12 AM
மேட்டூர்: கிழக்கு கால்வாய் கரையை ஆக்கிரமித்து, விநாயகர் கோவில் கட்ட அடித்தளம் அமைத்த மூவர் மீது, பொறியாளர் மேட்டூர் போலீசில் புகார் செய்தார்.
மேட்டூர் அணை கடந்த, 30ல் நிரம்பியதால் கிழக்கு, மேற்கு கால்வாயில் பாசனத்துக்கு வினாடிக்கு, 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. தற்-போது, 700 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி, பொறையூர் பகுதியில் நீர்வளத்துறை அதிகா-ரிகள் ஆய்வுக்கு வாகனத்தில் செல்லும் கால்வாய் கரையை, அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து அம்மன் கோவில் அருகே விநா-யகர் கோவில் கட்ட அடித்தளம் அமைத்தனர்.தகவல் அறிந்த, மேட்டூர் கால்வாய் பிரிவு உதவி பொறியாளர் விஜயராகவன், நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு சென்று பார்-வையிட்டார். அப்போது, கால்வாய் பிரிவு அலு-வலர்களுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் வாக்-குவாதம் ஏற்பட்டது. இது குறித்து உதவி பொறியாளர் விஜயராகவன், கால்வாய் கரையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கம்பி கட்டி சிமென்ட் அடித்தளம் அமைத்த ராஜேந்-திரன், கண்ணன், முத்து ஆகியோர் மீது, நேற்று போலீசில் புகார் செய்தார்.மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வரு-கின்றனர்.