/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குவாரியில் கற்கள் வெட்டிய விவகாரம் நில உரிமையாளர் மீது புகார்
/
குவாரியில் கற்கள் வெட்டிய விவகாரம் நில உரிமையாளர் மீது புகார்
குவாரியில் கற்கள் வெட்டிய விவகாரம் நில உரிமையாளர் மீது புகார்
குவாரியில் கற்கள் வெட்டிய விவகாரம் நில உரிமையாளர் மீது புகார்
ADDED : ஏப் 15, 2025 06:25 AM
இடைப்பாடி: கோணசமுத்திரம் கிராமத்தில் மூடப்பட்ட கல்குவாரியில், கற்கள் வெட்டி எடுத்த வாகனம் பறிமுதல் செய்யப்-பட்டது.
இடைப்பாடி தாலுகா, கோணசமுத்திரம் கிராமத்தில் வேலாயுத-கரடு அருகில், வேம்பனேரியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. வெடி வைத்து கற்கள் வெட்டி எடுப்பதால், வீடுகள் மீது கற்கள் விழுகிறது என்ற புகாரால், 10 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது.
இந்நிலையில், குவாரியில் மீண்டும் கற்கள் வெட்டி எடுப்பதாக புகார் வந்தது. இதையடுத்து கடந்த, 11 நள்ளிரவில் அப்பகுதிக்கு உடனடியாக சென்று சங்க-கிரி ஆர்.டி.ஓ., லோகநாயகி, தாசில்தார் ராஜமாணிக்கம், ஆர்.ஐ., அன்பரசி ஆகியோர் விசாரித்தனர்.இடைப்பாடி மண்டல துணை தாசில்தார் சீனிவாசன், கற்களை வெட்டி எடுத்த வாகனத்தை கொங்கணாபுரம் போலீசில் ஒப்ப-டைத்ததோடு, 10 யூனிட் பாறைளை உடைத்த நில உரிமையாளர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார். இது குறித்து கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்-கின்றனர்.