/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலாளி வீடு சூறை உறவினர்கள் மீது புகார்
/
தொழிலாளி வீடு சூறை உறவினர்கள் மீது புகார்
ADDED : செப் 03, 2025 02:38 AM
ஆத்துார்:சேலம் மாவட்டம், தளவாய்பட்டியை சேர்ந்த, வரதன் மகன் பிரபாகரன், 32; கூலித்தொழிலாளி. இவருக்கும், தென்னம்பிள்ளையூரை சேர்ந்த சிவரஞ்சினி, 27, என்பவருக்கும், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இரு குழந்தைகள் உள்ளனர்.
தம்பதி இடையே கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர். இருப்பினும் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், சிவரஞ்சினியின் உறவினர்கள் சிலர், பிரபாகரன் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதுகுறித்து அவர், போலீசில் புகார் அளித்தார். அதில், 'வீட்டில் இருந்த, 30,000 ரூபாய் மதிப்பிலான மின்மோட்டார் மாயமாகியுள்ளது. 'டிவி' உட்பட வீட்டு உபயோகப்பொருட்கள், இருசக்கர வாகனத்தை, மனைவியின் உறவினர்கள் அடித்து சேதப்படுத்தினர்' என கூறியிருந்தார்.