/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஈ.வெ.ரா., குறித்து அவதுாறு; சீமான் மீது போலீசில் புகார்
/
ஈ.வெ.ரா., குறித்து அவதுாறு; சீமான் மீது போலீசில் புகார்
ஈ.வெ.ரா., குறித்து அவதுாறு; சீமான் மீது போலீசில் புகார்
ஈ.வெ.ரா., குறித்து அவதுாறு; சீமான் மீது போலீசில் புகார்
ADDED : ஜன 10, 2025 07:14 AM
ஆத்துார்: பெண்கள் குறித்து, ஈ.வெ.ரா., தவறாக பேசியதாக தெரிவித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று முன்தினம் சென்னையில் பேசியது சர்ச்சையானது. இதனால், சேலம் மாவட்டம் ஆத்துார் நகர தி.மு.க., செயலர் பாலசுப்ரமணியம் தலைமையில், 'இண்டியா' கூட்டணி கட்சி நிர்வாகிகள், நேற்று, ஆத்துார் டவுன் போலீசில், 7 புகார் மனுக்களை வழங்கினர். அதில், 'ஈ.வெ.ரா., குறித்து, சீமான் தொடர்ந்து அவதுாறாக பேசி வருகிறார்.
அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. காங்., மாவட்ட பொருளாளர் ஓசுமணி, ம.தி.மு.க., மாவட்ட செயலர் கோபால்ராசு, வி.சி., மாவட்ட செயலர் கருப்பையா, இ.கம்யூ., மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சடையன், மனித நேய ஜனநாயக கட்சி தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலர் ரகுமான், தி.க., மாவட்ட தலைவர் வானவில் உடனிருந்தனர்.
* திராவிடர் விடுதலை கழக சேலம் கிழக்கு மாவட்ட செயலர் டேவிட் உள்ளிட்ட நிர்வாகிகள், சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த மனு: சீமான், கடந்த, 8ல் கடலுாரில் பேட்டி அளித்தபோது, ஈ.வெ.ரா. மீது பொய் செய்திகளை கூறி, தீய உள்நோக்கு எண்ணத்துடன் அவதுாறு பரப்பும்படி பேசியுள்ளார். அவர் மீது உரிய பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும்.