/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிரதமரை திட்டிய வி.சி.,யினர் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
/
பிரதமரை திட்டிய வி.சி.,யினர் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
பிரதமரை திட்டிய வி.சி.,யினர் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
பிரதமரை திட்டிய வி.சி.,யினர் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
ADDED : அக் 18, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், பா.ஜ.,வின், சேலம் கிழக்கு மாவட்ட வக்கீல் அணி தலைவர் மோகன்குமார், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த மனு:
மூன்று நாட்களுக்கு முன், வி.சி., கட்சியின், மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிறுத்தைகனி உள்பட பலர், பொது இடத்தில் பிரதமர் மோடியை தரக்குறைவான வார்த்தையில் திட்டி, தமிழகத்துக்குள் வந்தால், அவரது காரை மறிக்க வேண்டும் என பேசியுள்ளனர். மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையை 'எங்கு பார்த்தாலும் செருப்பால் அடிப்போம்' என்றும், பா.ஜ., தொண்டர்களை விரட்டி கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டல் தொனியில் பேசியுள்ளனர். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.