/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொது கிணற்றை ஆக்கிரமித்து கட்டுமானம் நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார்

ADDED : செப் 16, 2025 01:39 AM
சேலம், பொது கிணற்றை ஆக்கிரமித்து கட்டுமானம் நடப்பதால் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டரிடம் மக்கள் புகார் அளித்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே பாகல்பட்டி, பூமிநாயக்கன்பட்டி, அம்பேத்கர் நகரை சேர்ந்த மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். தொடர்ந்து அவர்கள், கலெக்டர் பிருந்தாதேவியிடம் அளித்த மனு:
எங்கள் பகுதியில் அரசுக்கு சொந்தமாக, 900 சதுரடி நிலம், பொது கிணறு இருந்தது. 10 ஆண்டுக்கு முன் வரை, நாங்கள் கிணற்று நீரை பயன்படுத்திய நிலையில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தண்ணீரின்றி கிணறு வற்றி விட்டது. அதில் சிலர், குப்பை கொட்டி மூடிவிட்டனர். இருப்பினும் அதை ஒட்டி மக்கள் தடமாக பயன்படுத்துகிறோம். 2 ஆண்டுக்கு முன், கிணறு இருந்த இடத்தில், தகர அட்டைகள் மூலம், கூரை அமைத்து வாகன நிறுத்துமிடமாக மாற்ற முயன்றனர். மக்கள் எதிர்ப்பால், அப்படியே விட்டு விட்டனர்.
தற்போது கூரையை சுற்றி சுவர் கட்டி வருகின்றனர். இதுகுறித்து, வி.ஏ.ஓ., - போலீசில் புகார் செய்தும் பலன் இல்லை. கிணற்றை ஆக்கிரமித்து கட்டுமானம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும்.