/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மரங்களை வெட்டியதாக புகார்; தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்
/
மரங்களை வெட்டியதாக புகார்; தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்
மரங்களை வெட்டியதாக புகார்; தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்
மரங்களை வெட்டியதாக புகார்; தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்
ADDED : அக் 18, 2024 07:21 AM
இடைப்பாடி: இடைப்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அனுமதியின்றி மரம் வெட்டியதாக தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு, தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. நுாற்றாண்டு பழமையான பள்ளியில் ஏராளமான மரங்கள் உள்ளன. கடந்த ஜூன், 19ல் இடைப்பாடி பகுதியில் பெய்த பலத்த மழையின் போது, சில மரங்களின் கிளைகள் உடைந்து விழுந்தன. அப்போது மரக்கிளைகளுடன், மரங்களையும் சேர்த்து அகற்றியதோடு, வெட்டப்பட்ட மரங்களை விற்பனை செய்து முறைகேடு செய்துள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிலர் புகார் தெரிவித்தனர். ஆனால், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அனுப்பிய புகார்படி, பசுமை தீர்ப்பாயத்தில் இருந்து விளக்கம் கேட்டு, இடைப்பாடி தாசில்தாருக்கு கடிதம் அனுப்பினர்.
இந்நிலையில், இடைப்பாடி தாசில்தார் வைத்தியலிங்கம், இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், 'மரக்கிளைகளை வெட்டுவதற்கு பதிலாக, மரங்களை வெட்டியதாக புகார் கூறப்பட்டு உள்ளது. சம்மந்தப்பட்ட அப்போதைய தலைமை ஆசிரியர் பால்ராஜ், உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர் விளக்கம் கொடுக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.