/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர்வீழ்ச்சியில் நுழைவதாக புகார்; பாதுகாப்பு பணியில் வனத்துறை
/
நீர்வீழ்ச்சியில் நுழைவதாக புகார்; பாதுகாப்பு பணியில் வனத்துறை
நீர்வீழ்ச்சியில் நுழைவதாக புகார்; பாதுகாப்பு பணியில் வனத்துறை
நீர்வீழ்ச்சியில் நுழைவதாக புகார்; பாதுகாப்பு பணியில் வனத்துறை
ADDED : மே 24, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார் : சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி முட்டல் மலை கிராமம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு முட்டல் ஏரி, ஆணைவாரி நீர் வீழ்ச்சி உள்ளது.
சில நாட்களாக கல்வராயன்மலையில் தொடர் மழையால் ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. இதனால் மறு உத்தரவு வரும் வரை, ஆணைவாரி நீர் வீழ்ச்சி, முட்டல் ஏரி, பூங்கா, படகு சவாரி மூடப்படுவதாக, வனத்துறை அறிவித்தது. ஆனால் சிலர், வனப்பகுதிக்குள் செல்வதாக புகார் வந்ததால் ஆத்துார் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர், தொடர்ந்து ரோந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.