/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடியிருப்பை காலி செய்ய நெருக்கடி ரயில்வே லைன் மக்கள் புகார்
/
குடியிருப்பை காலி செய்ய நெருக்கடி ரயில்வே லைன் மக்கள் புகார்
குடியிருப்பை காலி செய்ய நெருக்கடி ரயில்வே லைன் மக்கள் புகார்
குடியிருப்பை காலி செய்ய நெருக்கடி ரயில்வே லைன் மக்கள் புகார்
ADDED : செப் 21, 2024 06:50 AM
சேலம்: சேலம், பொன்னம்மாபேட்டை, 11வது வார்டு ரயில்வே லைன் வடக்கு, அருந்ததியர் தெரு, தேவேந்திர குல வேளாளர் தெருவில் வசிக்கும் மக்கள் திரண்டு வந்து, நேற்று கலெக்டர் அலுவல-கத்தில் அளித்த மனு:
சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம், எங்கள் குடியிருப்புகளை காலி செய்ய, 'நோட்டீஸ்' அனுப்பி நெருக்கடி கொடுக்கிறது. 100க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கு தேவையான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, மாநகராட்சி நிர்-வாகம் செய்து கொடுத்துள்ளது.
அங்குள்ள அனைத்து குடும்பத்தி-னருக்கும் ரேஷன், ஆதார், வாக்காளர் அட்டை, வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. கூலி வேலை செய்து குடும்பம் நடத்தும் எங்களை அதே இடத்தில் வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் மாற்று இடம் வழங்கி
தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும்.தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடுஉறவினர்கள் சாலை மறியல்
கெங்கவல்லி: பள்ளி பஸ் மோதி உயிரிழிந்த தொழிலாளி குடும்பத்தினருக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர்புதுாரை சேர்ந்-தவர் வடிவேலு, 39. மேளம் அடிக்கும் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம்
ஆணையம்பட்டி வழியே பைக்கில் சென்ற-போது, தனியார் பள்ளி பஸ் மோதியதில் உயிரிழந்தார். கெங்க-வல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.இந்நிலையில் நேற்று மதியம், 1:00 மணிக்கு வடிவேலுவின் உற-வினர்கள், ஆத்துார் - கெங்கவல்லி சாலையில் மறியலில் ஈடுபட்-டனர்.
அப்போது வடிவேல் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தினர். சாலை நடுவே இருசக்கர வாகனங்களை நிறுத்தி மறியலில்
ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கெங்க-வல்லி போலீசார் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் அனைவரும்
கலைந்து சென்றனர்.