/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கணினி, ஹார்ட் டிஸ்க் அலுவலகத்தில் திருட்டு
/
கணினி, ஹார்ட் டிஸ்க் அலுவலகத்தில் திருட்டு
ADDED : ஜூன் 12, 2025 02:07 AM
சேலம், தனியார் ஆபீசில் கணினி, ஹார்ட் டிஸ்க் திருடியதாக தம்பதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் டவுன், காமராஜர் தெருவை சேந்தவர் கார்த்திகா, 35. இவரது கணவர் செல்வகுமார், சொந்தமாக, 'இன்டீரியர்' அலுவலகம் நடத்தி வந்தார்.
கடந்த ஆண்டு மாரடைப்பால் இறந்ததால், அலுவலகத்தை கார்த்திகா கவனித்து வந்தார். சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அப்போது கார்த்திகாவின் உறவினர்களான செந்தில்குமார், அவரது மனைவி வனிதா ஆகியோர் கடந்த, 30ல் அலுவலகத்தில் இருந்த, இரு கணினி, இரு ஹார்ட் டிஸ்க் மற்றும் காசோலைகளை எடுத்துச்சென்றதாக, கார்த்திகா நேற்று முன்தினம் அளித்த புகார்படி, டவுன் போலீசார்
விசாரிக்கின்றனர்.