/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க.,வை சேர்ந்த கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருக்கு நிபந்தனை ஜாமின்
/
அ.தி.மு.க.,வை சேர்ந்த கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருக்கு நிபந்தனை ஜாமின்
அ.தி.மு.க.,வை சேர்ந்த கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருக்கு நிபந்தனை ஜாமின்
அ.தி.மு.க.,வை சேர்ந்த கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருக்கு நிபந்தனை ஜாமின்
ADDED : ஏப் 17, 2024 12:43 PM
சேலம்: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், 2017 - 2020 வரை, பல்வேறு இனங்களில், 2.93 கோடி ரூபாய் வரை மோசடி கண்டுபிடிக்கப்பட்டு அதில், 1.50 கோடி ரூபாய், சங்க நிர்வாகத்திடம் வசூலிக்கப்பட்டது. மீதி, 1.43 கோடி ரூபாயை சங்கத்துக்கு செலுத்தாமல் போக்கு காட்டினர்.
இதுதொடர்பாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவுபோலீசார் வழக்கு பதிந்து, சங்க முன்னாள் செயலர் மோகன், 56, முன்னாள் உதவி செயலர் மணி, மத்திய கூட்டுறவு வங்கி கள அலுவலர் ஆனந்த்குமார், 51, ஆகியோரை, கடந்தாண்டு ஜூலை கைது செய்தனர். நிர்வாக குழு உறுப்பினர் மாதையன் இறந்ததால் அவர் போக, தலைமறைவான, 9 பேரை தேடினர். அவர்களில், அ.தி.மு.க., பிரமுகரான, சங்க தலைவராக இருந்த சத்யபானு, 47, உதவி தலைவராக இருந்த வடிவேல், 45, பிப்ரவரியில் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே இருவரின் முன்ஜாமின் மனு, 3 முறை தள்ளுபடியானது. கைதுக்கு பின், சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சத்யபானுவின் ஜாமின் மனு, 3 முறை, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது. இதையடுத்து, 10 லட்சம் ரூபாய் முன்வைப்பு தொகை செலுத்தி ஜாமின் கோரப்பட்டது. அதையேற்று, 72 நாள் சிறைவாசத்துக்கு பின், சத்யபானுவுக்கு நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமின் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்னும் ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

